புதிய 10 ரூபாய் நோட்டு இதுதான்..வீடியோ

  • 6 years ago
சாக்லேட் நிறத்தில் கொனார்க் சூரியக் கோவில் உடன் கூடிய புதிய 10 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கடந்த 2005 இல் அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் இருக்கும் நிலையில், புதிய 10 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலை பெற்று அச்சடித்துள்ளது ரிசர்வ் வங்கி. சாக்லேட் பிரவுன் வண்ணத்தில் புதிய 10 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் கொனார்க் சூரிய கோயிலின் படம் இருக்கும். 100 கோடி புதிய 10 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2016 நவம்பர் மாதம், இந்திய அரசால், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில், 17.9 ட்ரில்லியன் ரூபாய் நோட்டுகள் சுழற்சியில் இருந்தது

ரிசர்வ் வங்கி பிங்க் நிறத்தில் புதிய 2000 மற்றும் சாம்பல் நிறத்தில் 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து விநியோகம் செய்தது. அதன்பின்னர், ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 11.1 % அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


The Reserve Bank of India (RBI) is going to issue new Rs 10 notes under the Mahatma Gandhi series with chocolate brown colour as the base. The new note will bear the picture of the Konark Sun Temple.

Recommended