ஆந்திராவில் வைரமலை கண்டுபிடிப்பு- வீடியோ

  • 6 years ago
ஆந்திராவில் வைர மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் துங்கிலி மண்டலம் சென்னம்பள்ளியில் பழமை வாய்ந்த கோட்டை உள்ளது. அரவீடு திம்மராஜா என்பவர் 100 ஏக்கர் பரப்பளவில் மலையை குடைந்து இந்த சென்னம்பள்ளி கோட்டையை 16ம் நூற்றாண்டில் கட்டினார். அவரது காலத்திற்கு பிறகு குத்திராஜா, விஜயநகர அரசர்கள் ஆட்சியின் கீழ் இந்த கோட்டை இருந்ததாகவும், போர்ச்சுகீசியர்கள் போர் தொடுத்து வந்தபோது, மன்னர்கள் இந்த கோட்டையின் கீழ் உள்ள சுரங்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வைடூரியங்கள் அடங்கிய புதையலை பதுக்கி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த புதையலை எடுக்க பலர் முயற்சி செய்தும் முடியவில்லை. இந்நிலையில் ஆந்திர மாநில தொல்லியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கோட்டையில் புதையல் இருப்பதாக அரசுக்கும் தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம்தேதி புதையலை எடுக்க தொல்லியியல் துறை திட்ட இயக்குனர் விஜயகுமார், சுரங்கத்துறை உதவி இயக்குனர் நடராஜன் மற்றும் கர்னூல் மாவட்ட எஸ்.பி. கோபிநாத் ஜெட்டி தலைமையில் அதிகாரிகள் புதையல் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக புதையலுக்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. புதையலை எடுப்பதற்காக சென்னூர் கோட்டையை சுற்றிலும் 3 இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டது.

Diamond Mountain is found in Andhra Pradesh. Andhra govt has found Diamond mountain in sennoor fort at sennooor. The Diamond Mountain has got in search of treasure. There is heavy security around the area of Diamond Hill.