ஆதார் பயனாளர்களின் விவரத்தை சரிபார்க்க விரல் ரேகை பதிவு மற்றும் கண் விழிப் படலத்துடன் முக அடையாளத்தை பயன்படுத்த முடிவு யூஐடிஏஐ முடிவு செய்துள்ளது. இந்த புதிய வசதி ஜூலை 1ம் தேதி 2018 முதல் அமலுக்கு வருகிறது. யூஐடிஏஐ கூடுதலாக ஆதார் விவரத்தை சரிபார்ப்பதற்கு கூடுதலான ஒரு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்பை யூஐடிஐயின் சிஇஓ அஜய் பூஷன் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. வயதானோர் மற்றும் சிறுவர்களின் விரல் ரேகை மற்றும் கண்விழிப் படலத்தை வைத்து இவற்றை சரிபார்ப்பதில் சிரமம் இருக்கிறது.
எனவே முக அடையாளத்தை பயன்படுத்தி ஆதார் விவரங்களை சரிபார்க்கும புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அஜய் பூஷன் கூறியுள்ளார். இந்த நடைமுறை ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் யூஐடிஏஐ வெர்சுவல் ஐடி நம்பர் ஒன்றை பாதுகாப்பு அம்சங்களுக்காக அறிமுகம் செய்தது. இதன் மூலம் பயனாளர்கள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கு பதில் இந்த வெர்சுவல் ஐடி நம்பரை தெரிவித்தாலே போதுமானது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுடனும், மானியம் பெறவும் ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது. வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் எண் உள்ளிட்டவைகளும் ஆதாருடன் இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு கூறி வருகிறது.
UIDAI introdues face authentication to verify Aadhaar users, and the new technology will be introduced from July 1, 2018. This new tecchnology is to benefit children and elder people

Category
🗞
News