2018-ஆம் ஆண்டுக்கான ஆற்காடு பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?- வீடியோ

  • 7 years ago
இந்தோனேசியாவில் அக்னி குழம்புகள் வெளிப்படும்... ஜப்பான், இந்தியா, மலேசியாவில் கடல் கொந்தளிக்கும்... கடலுக்கு அடியில் உள்ள பூமியில் விலகுதல் ஏற்படும் என்று பண்டிதர் பச்சை ராஜென் கணித்துள்ளார்.
டிசம்பர் 15ஆம் தேதி முதல் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் ஆண்டு வரை இதன் தாக்கம் இருக்கும் என்றாலும் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என்று கணித்துள்ளார் பண்டிதர். அவர் எழுதிய புத்தகத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சனிப்பெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நிகழ உள்ளது. வரும் 19ஆம் தேதியன்று செவ்வாய் கிழமையன்று விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார் சனி பகவான். நீர் ராசியில் இருந்து நெருப்பு ராசியில் அமர்கிறார் சனீஸ்வரன்.பண்டிதர் பச்சை ராஜென் எழுதிய புத்தகத்தில், தனுசு ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் மக்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். 2018 மார்ச் 2ஆம் தேதி வரை நாட்டில் அரசியல் கட்சிகளிடையே சிக்கல் ஏற்படும், குழப்பம், போராட்டம் அதிகரிக்கும். அநீதிகள் அழிக்கப்பட்டு ஆகஸ்ட் 2018ஆம் தேதிக்கு பிறகு மக்கள் மாறுபட்ட சிந்தனையை நாடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படும்.

சனிப்பெயர்ச்சி தினத்தன்று சனீஸ்வரர் நின்ற கிரகம் கேது. கேது கிரகம் கடல் ராசியில் இருப்பதாலும், கேது நின்ற கிரகம் செவ்வாய் என்பதாலும் சனி, செவ்வாய், கேது கிரகங்களின் போராட்டங்களினால் கடலுக்கு அடியில் விலகுதல் ஏற்பட்டு கடல் கொந்தளிக்கும். இது டிசம்பர் 15 முதல் 2018 பிப்ரவரி வரை இருந்து வரும்.

The Hindu Astrological almanac, Arcot Panchangam for the year 2017 – 2018 has been able to predict most of the events that happened so far, including the Tsunami and earth quake.

Recommended