• 8 years ago
இனிமேல் கண்ட நேரத்தில் எல்லாம் 'காண்டம்' விளம்பரத்தை டிவியில் காட்ட முடியாது. மத்திய அரசு டிவி சேனல்களுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தலில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் அம்மா, அப்பா, பிள்ளை குட்டிகளோடு உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு ஆணும், பெண்ணும் ஒரு சிறு பாக்கெட்டை கையில் பிடித்தபடி கட்டிலில் கட்டி உருளும் காட்சிகள் வெளியாகிறதா? உங்களை அப்படியே ரிமோட் பக்கம் கையை கொண்டு செல்ல வைக்கிறதா?

இது ஏதோ உங்களுக்கு மட்டும் நடக்கும் நெளிய வைக்கும் நிகழ்வு கிடையாது. இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களின் பெரியவர்களும், சிறியவர்களும் இதுபோன்ற ஆணுறை விளம்பரங்களை பார்த்து அசடு வழியத்தான் உட்கார்ந்துள்ளனர்.

இந்த நிலையை மாற்றத்தான் மத்திய அரசு புதிய நெறிமுறையை பிறப்பித்துள்ளது. டிவி சேனல்கள் இனிமேல் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஆணுறை விளம்பரத்தை காட்ட முடியுமே தவிர, எல்லா நேரத்திலும் காண்பிக்க முடியாது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே ஆணுறை விளம்பரத்தை காண்பிக்க வேண்டும் என்று அரசு நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. சிறுவர்கள் கண்களில் இந்த விளம்பரங்கள் தென்பட கூடாது என்பதே நோக்கம்.


The Ministry of Information and Broadcasting said condom advertisements will now be allowed only between 10 pm and 6 am to avoid exposing children to such material and to comply with government rules..

Category

🗞
News

Recommended