• 8 years ago
மும்பையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய தஷ்வந்த் ஒரே நாள் இரவில் தாடியை ஷேவ் செய்து விட்டு ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டு சுற்றியுள்ளார். தஷ்வந்துக்கு மும்பையில் பணம் கொடுத்து உதவியது யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிறுமி ஹாசினியை கொன்று விட்டு சிறைக்குப் போய் ஜாமீனில் வந்த தஷ்வந்த் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தாயை கொடூரமாக கொன்று விட்டு தப்பினார். குன்றத்தூர் போலீசார் 3 தனிப்படை அமைத்து அவரை தேடினர். தலைமறைவான தஷ்வந்த்தை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர்.

தஷ்வந்துக்குப் விபச்சார தொழில் புரோக்கர் ஒருவர் உதவி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த புரோக்கருக்கும் தஷ்வந்துக்கும் சிறையில் இருக்கும்போதுதான் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மும்பையில் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவரின் போன் நம்பரை தஷ்வந்திடம் புரோக்கர் கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணிடம் போனில் பேசிய தஷ்வந்த் கோயம்பேடு சென்று அங்கிருந்து பெங்களூருக்கும், அதனைத்தொடர்ந்து மும்பைக்கும் சென்றுள்ளான்.

Dhasavanth, 23, was again arrested by a special team of the Chennai Police on Friday 8 December, in Mumbai. This tracked him down after they realised that he had a weakness for betting on horse races.

Category

🗞
News

Recommended