• last year
அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் நானே கொடியேற்றுவேன்; பிரதமர் மோடி உறுதி!
சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 10-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, “கடந்த 2014-ல் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. இப்போது 5-வது இடத்துக்கு நாடு முன்னேறியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். வரும் 2047-ம் ஆண்டில் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுத்திருக்கும்” என்ற மோடி, “மத்திய அரசு மீதான நம்பிக்கை காரணமாக கடந்த 2019-ம் ஆண்டில் மத்தியில் வலுவான ஆட்சி அமைய மக்கள் வாக்களித்தனர். மக்களின் நல்லாசியுடன் அடுத்த ஆண்டு சுதந்திரதின விழாவின்போதும் செங்கோட்டையில் நானே தேசிய கொடி ஏற்றுவேன் என்றார்.

Category

🗞
News

Recommended