• last year
ரூவா இருந்தா பிடுங்கிக்கிடுவானுக... படிப்பை மட்டும் தான் பறிக்கமுடியாது; மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு!
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சட்டமன்றத் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு சென்னை - நீலாங்கரையில் 17-ம் தேதி நடைபெற்றது.
இதில் பேசிய நடிகர் விஜய், “இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யக் காரணமே சமீபத்தில் நான் கேட்ட ஒரு படத்தின் வசனம் தான். ‘காடு இருந்தா எடுத்துக்கிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிக்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துக்கிடவே முடியாது’. அது தான் அந்த வசனம். இது நூற்றுக்கு நூறு உண்மை மற்றும் யதார்த்தம். அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது கல்வி. அதற்கு எனது தரப்பில் ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினேன். அதற்கான நேரம் தான் இது.

Category

🗞
News

Recommended