• 2 years ago
"காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க என்று உங்கள் பெற்றாேர்களிடம் சொல்லுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்" என்று மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் அறிவுரை வழங்கினார்.

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத் தொகையை நடிகர் விஜய் வழங்கினார். முன்னதாக பேசிய விஜய், ``என் நெஞ்சில் குடியிருக்கும், பொதுத்தேர்வில் சாதனை படைத்த நண்பா, நண்பிகளுக்கும், பெற்றோர்களுக்கும், மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என்னுடைய வணக்கம். படத்தின் ஆடியோ நிகழ்ச்சி பேசியிருக்கிறேன், பல நிகழ்ச்சியிலும் பேசி இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி எனக்கு புதுசு. ஏதோ பொறுப்பு வந்திருக்கிறது போல் நினைக்கிறேன். உங்களை எல்லாம் பார்க்கும்போது என்னுடைய பள்ளி பருவம் தான் வந்து போகிறது. நான் உங்களை மாதிரி திறமையான மாணவன் கிடையாது. ஒரு ஜஸ்ட் பாஸ் மாணவன்தான். நான் நடிகன் ஆகவில்லை என்றால் ஒரு டாக்டர் ஆகி இருப்பேன் என்று சொல்லி உங்களை நான் போர் அடிக்க விரும்பவில்லை. என்னுடைய கனவெல்லாம் சினிமா நடிப்பு தான். அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறேன்.

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/

Category

People

Recommended