• 2 years ago
இயக்குநர் அனுராக் கஷ்யப்பின் ‘கென்னடி’ படத்தில் நடித்துள்ளார் நடிகை சன்னி லியோன். இந்தத் திரைப்படம் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு இந்தப் படத்தை பார்த்து விட்டு பலரும் சன்னியின் நடிப்பிற்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவிக்க நெகிழ்ந்து போயிருக்கிறார் சன்னி.

அவர் அங்கு கூறியிருப்பதாவது, ‘என் மீது எப்போதும் அடல்ட் பட நடிகை என்ற முத்திரை உள்ளது. அதை எல்லாம் நீக்கி என் நடிப்புத் திறனை நிரூபிக்கும் வகையில் ‘கென்னடி’ அமைந்துள்ளது மகிழ்ச்சி. நான் பாலிவுட் படத்தில் நடிப்பேன் என நினைத்துக் கூட பார்த்தது இல்லை. இந்த வாய்ப்பு அமைந்ததற்கு நன்றி’ என நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார் சன்னி. ‘கென்னடி’ படத்தை முதலில் விக்ரமை மனதில் வைத்தே உருவாக்கியதாகவும் ஆனால், அவரைத் தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினாலேயே வேறொரு நடிகரைத் தேர்வு செய்ததாகவும் இயக்குநர் அனுராக் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#Kamadenutamil #Kamadenu #காமதேனு #காமதேனுதமிழ்

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/

Category

People

Recommended