• last year
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செக்; 40 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய வருமான வரித்துறை!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி மற்றும் டாஸ்மாக், மின்துறை ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த 26-ம் தேதி திடீர் சோதனை நடத்தினர்.

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள பிஷப் கார்டன் பகுதியில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, அவரது அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடந்தது.
கோவையில் கோல்டுவின்ஸ் பகுதியில் திமுகவை சேர்ந்த தொழிலதிபர் செந்தில் கார்த்திகேயன் வீடு, அலுவலகம், தொண்டாமுத்தூரில் செந்தில் பாலாஜியின் நண்பரான அரவிந்துக்கு சொந்தமான மதுபோதை மறுவாழ்வு சிகிச்சை மையம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அவரது வீடு, புலியகுளம் - சவுரிபாளையம் சாலையில் உள்ள அவரது அலுவலகம், பொள்ளாச்சி கிணத்துக்கடவு அடுத்த பனப்பட்டி பகுதியில் உள்ள செந்தில் பாலாஜி உறவினர் சங்கர் ஆனந்தின் எம்.சாண்ட் ஆலை ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

Category

🗞
News

Recommended