• last year
காத்திருந்தார் காரியம் சாதித்தார்; கர்நாடக முதல்வராக பதவியேற்ற சித்தராமையா!
கர்நாடகத்தின் புதிய முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் 21-ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் 136 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரையும் அழைத்து சமாதானம் பேசிய காங்கிரஸ் தலைமை, சிவக்குமாரை போட்டியிலிருந்து விலகவைத்தது. சிவக்குமாருக்கும் அவரது ஆதரவு எம் எல்ஏ-க்களுக்கும் அமைச்சரவையில் முக்கியமான துறைகள் ஒதுக்கப்படுவதாக அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை அளித்து இந்த உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிகிறது.
சித்தராமையா, சிவகுமார் ஆகியோருடன் கேபினெட் அமைச்சர்கள் 8 பேரும் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Category

🗞
News

Recommended