• 2 years ago
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13 அன்று எண்ணப்பட்டது. இதில் பெரும்பான்மைக்கு தேவையான 113 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 65-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி வரிசைக்கு மாறியது.

Category

🗞
News

Recommended