• 2 years ago
நடிகை சமந்தாவை பிரிந்து 2 ஆண்டுகளான நிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்து நடிகர் நாகசைதன்யா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் ‘’ நாங்கள் பிரிந்தாலும்கூட சமந்தாவோடு சேர்ந்து வாழ்ந்த நாட்களை மதிக்கிறேன். உண்மையில் சமந்தா மிகவும் நல்ல பெண். சமூக வலைதளத்தில் வந்த வதந்தி காரணமாகத்தான் எங்கள் இருவர் இடையே பிரச்சினை ஆரம்பமானது. அது மெல்ல, மெல்ல பெரிதாகி கடைசியில் பிரிந்து விட வேண்டிய நிலைமை வந்தது.

முதலில் நான் அந்த வதந்தி குறித்து அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், அதன்பிறகு நிலைமைகள் மாறிவிட்டன. நாங்கள் பிரிந்து விட்டாலும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்துள்ளோம். ஆனால், சில ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. அது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

எங்களின் கடந்த காலத்தில் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத மூன்றாவது மனிதரை இதற்குள் இழுத்து அவமரியாதை செய்தனர். என்ன நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என நினைத்துக் கொள்கிறேன். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

#samantha #nagachaitanya #divorce #tamilactressfamily

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/

Category

🗞
News

Recommended