• last year
திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தந்தையாகிறார் ராம் சரண். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் வாரிசான ராம் சரண், தன்னுடைய வாரிசு தொடர்பான கேள்விகள் பலவற்றை முன்னதாக சங்கடத்துடன் தவிர்த்திருக்கிறார். சிரஞ்சீவி குடும்பத்தையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி வந்த இந்த ஏக்கம் தற்போது மறைந்திருக்கிறது.

ராம் சரண் - உபாசனா கொனிடேலா தம்பதி தங்களது முதல் குழந்தையை ஜூலையில் உச்சிமுகர இருக்கின்றனர். இந்த நட்சத்திர குடும்பத்துக்கு அப்பால் சிரஞ்சீவி - ராம் சரண் ரசிகர்களும் இதனை கொண்டாடி வருகின்றனர். உபாசனா கருவுற்றது முதலே மனைவியுடன் அதிகம் நேரம் செலவழித்து வரும் ராம் சரண், அமெரிக்கா, துபாய், மாலத்தீவு என மனைவியுடன் வலம் வருகிறார்.

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/

Category

People

Recommended