அஜித்துக்கு பைக் ரேஸ், ஷாலினிக்கு இறகு பந்தாட்டம் வரிசையில் ஷாம்லிக்கு ஓவியம் என்றாகிப் போனது. அக்கா ஷாலினி போலவே குழந்தை நட்சத்திரமாக கலை வாழ்க்கையை தொடங்கிய ஷாம்லி, ஷாலினி காணாத சாதனைகளை மழலை பருவத்திலேயே கடந்தார். அவரே பின்னர் பருவ வயதை எட்டியதும், உச்ச நட்சத்திர நடிகையாக வலம் வருவார் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கினார். ஆனபோதும் கலை வாழ்க்கையை விட்டு ஷாம்லி விலகியபாடில்லை. நடிப்புக்கு பதிலாக ஓவியம் ஷாம்லியை ஆக்கிரமித்திருக்கிறது.
Category
🗞
News