கே.ராம்நாத் 1930 களிலேயே தமிழ் சினிமாவில் செய்த புதுமைகளால் பிரமிப்பை ஏற்படுத்தியவர். ‘பக்தி’ (1938) என்ற படத்தில் ஒரு காட்சியில் பஞ்சத்தால் வறண்டுகிடக்கும் பூமியில் நெல் மழை பொழிய வேண்டும். அதை எப்படிப் படமாக்குவது என்று பலரும் யோசித்து யோசித்துக் குழம்பிக்கிடந்தார்கள். அப்போதுதான் ராம்நாத்தின் சிந்தையில் அந்த எண்ணம் தோன்றியது. அதன்படி மினியேச்சர் முறையில் அந்தக் காட்சியைப் படம் பிடித்தார் ராம்நாத். அசந்துபோனார்கள் உடனிருந்த திரைத்துறையினர்.
Category
🗞
News