• last year
தமிழ் புத்தாண்டு தினத்தில் திமுக தலைவர்கள் சிலரது சொத்து மற்றும் ஊழல் பட்டியலை செய்தியாளர்களுக்கு படம்போட்டு விளக்கினார் பாஜக தலைவர் அண்ணாமலை.
அப்போது "மாநில தலைவர் ஆன பிறகு மாதம் ரூ.8 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது. எனது வீட்டு வாடகை, உதவியாளர்களுக்கான ஊதியத்தை நண்பர்கள் தான் தருகிறார்கள். காருக்கு கட்சி தான் பெட்ரோல் போடுகிறது” தன்னிலை விளக்கம் தந்த அண்ணாமலை,
தொடர்ந்து, திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்களை வெளியிட்டார். திமுகவினரின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்பது அண்ணாமலை சொன்ன கணக்கு!

Category

🗞
News

Recommended