புன்னிய ஸ்தளத்தில் புத்துயிர் பெரும் மனிதர்கள்- வீடியோ

  • 6 years ago
ராமேஸ்வரம் மாந்தோப்பு பகுதியில் மனோலயா மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இக்காப்பகத்தில் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஓற்றப்பாலத்தை சேர்ந்த முகம்மது இக்பால் பூரண குணமடைந்தால் சென்னை பட்டிணபாக்கம் மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி சீமா அக்ரவால் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சாகிரா நேரில் ஆய்வு மேற்கொண்டு உறவினரிடம் ஓப்படைத்தனர்.

இந்த தனியார் தொண்டு நிறுவனம் ராமேஸ்வரம் மாந்தோப்பு பகுதியில் மனநல காப்பகம் அரிச்சல்முனை முதல் பாம்பன் வரை உள்ள மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிபவர்களை அரவணைத்து காப்பகத்தில் 40 ஆதரவற்றறோரை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த புண்ணிய தீவில் வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்னர். இதில் பாதிபேர்கள் தங்கள் பிள்ளைகள் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தால் இங்கே சென்று விடுவது அல்லது வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களா இருந்தால் சரி வர கவனிக்காமல் அவர்களை அப்படியே விட்டு விடுவதால் இறுதியாக ராமேஸ்வரம் தீவில் மனநலம் பாதிக்கப்பட்டு தெரு தெருவாக சுற்றி திரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களை காக்கும் வகையில் ராமேஸ்வரம் தீவில் மனோலயா மனநல காப்பகம் ஓன்று தனியார் தொண்டு நிறுவனங்களால் அமைக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிபவர்களையும் சரி பொதுமக்கள் இவர்களை பிடித்து மனநல காப்பகத்தில் கொடுத்தாலும் சரி மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அன்போடு பேசி பழகி அவர்களின் பழைய நிலைமை வர மருத்தவர்களை கொண்டு சரி செய்து பூரண குணமடைய செய்து வருகிறார்கள்.மேலும் குணமடைந்தவர்களை உறவினர்களிடம் ஓப்படைப்பதற்காக மாநில குற்ற ஆவண காப்பகம் மூலம் அனுகிய உடன் அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்கின்றனர்.மாந்தேப்பில் உள்ள மனநல காப்பகத்தில் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஓற்றப்பாலத்தை சேர்ந்த முகம்மது இக்பால் தமக்கு பூரண குணமடைந்து காப்பகத்தில் உள்ளவர்களிடம் தமது வீட்டின் முகவரியை தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் காப்பகம் நடத்துவபவர்கள் மாநில குற்ற ஆவண காப்பகத்தை தொடர்பு கொண்டனர்.இதில் ஏடிஜிபி அவர்கள் காவல்ஆய்வாளர் சாகிராவை காப்பத்துக்கு மே மாதம் அனுப்பி வைத்தனர்.நேரில் வந்த காவல் ஆய்வாளர் குணமடைந்த இக்பாலிடம் விசாராணை செய்து கொடுக்கப்பட்ட முகவரியை வாங்கி கொண்டு மாநில குற்ற ஆவண காப்பகம் கேரளா சென்று முகவரியை கண்டுபிடித்து உறவினர்களிடம் தெரிவித்த பின்பு 5 வருடங்களாக தேடி வந்த இக்பால் கிடைத்த உடன் மகிழ்ச்சியடைந்தனர்.அத்துடன் தகவல் அறிந்த உறவினர்கள்ராமேஸ்வரம் மனநல காப்பகத்துக்கு வந்து இக்பாலை சந்தித்த உடன் தம் உடன் பிறந்த அண்ணன் மற்றும் பெரியப்பா மகன் அனைவரையும் கண்டு பெயரை சொல்லி குறிப்பிட்ட உடன் உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.இக்பாலின் உறவினர்கள் மனநல காப்பகத்தில் கையெழுத்திட்டு தமது சொந்த காரில் பாலக்காடு மாவட்டம் ஓற்றப்பாலத்துக்கு அழைத்து சென்றனர்.காப்பகத்தில் 40 பேர்களில் இக்பால் தவிர மீதமுள்ள 39 பேரை மனநல காப்பகத்தில் வைத்து மருத்துவர் கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Des : Manolaya mental health care is functioning in the Rameshwaram Manduppu area. Mohammad Iqbal, who was in the Kerala State of Palakkad district in Palakkad district, was arrested by the police inspector Chakra on the orders of the Chhattisgarh State Crime Documents ADGP Seema Agrawal.

Category

🗞
News

Recommended