உறவினர் இறந்ததற்கு காரணம் மீம்ஸ் தான்-வைகோ கதறல்

  • 6 years ago
என்னைப் பற்றிய மீம்ஸை பார்த்து மனஉளைச்சலிலேயே மருமகன் சரவணன் சுரேஷ் தீக்குளித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இனியாவது மீம்ஸ் போடுபவர்கள் யோசித்து போட வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்டெர்லைட்டு நிர்வாகத்தில் பங்கு வாங்கிவிட்டதாக போடப்பட்டுள்ள மீம்ஸால் குடும்பத்தினர் உளக்கொதிப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். என்னுடைய மனைவி ரேணுகாதேவியின் அண்ணன் ராமானுஜத்தின் மூத்த மகன் இப்போது தீக்குளித்து உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறார். சரவணன் சுரேஷ் ஒரு பட்டதாரி அவர் மனைவி அமுதா அருமையான வாழ்க்கைத் துணை, அழகான குடும்பம். எங்களின் குடும்பத்திலேயே என்னுடன் கட்சிப்பணிகள் அனைத்திலும் இருப்பவர் சரவணன் சுரேஷ் மட்டுமே. என்னுடைய மைத்துனருக்கு 5 மகன்கள், அரசியல் ரீதியாக என்னுடனே இருப்பவர் சரவணன் சுரேஷ் தான்.



MDMK chief Vaiko says the hatred memes against him is the reason for his relative Saravana Suresh self immolation, and requests all hereafter dont do this kind of hatred memes.

Category

🗞
News

Recommended