• 6 years ago
கடந்த பத்து நாட்களாக, சமூக வலைதளங்களில் அதிகமாக உலாவும் மீம்ஸ் டெம்ப்ளேட் 'சூரியவம்சம்' படத்தில் ராதிகா சரத்குமாரிடம் சொல்லும் வசனம் தான்.
"என்ற பேர்ல என்ன சொத்து இருக்குனு கேட்ட மத்த புள்ளைங்க எங்க... நான் பெருசா நினைக்கிற சொத்தே என் அப்பாதான்னு சொன்ன சின்ராசு எங்க..?' எனும் இந்த ஒற்றை டெம்ப்ளேட்டை வைத்துக்கொண்டு மீம்ஸ்களை உருவாக்கித் தள்ளினார்கள் மீம் கிரியேட்டர்கள்.
சமூக வலைதளங்களை ஒட்டுமொத்தமாக சூர்யவம்சம் மீம்ஸ்களே ஆக்கிரமித்திருக்க, இவை அத்தனைக்கும் காரணமான, 'சூர்யவம்சம்' படத்தின் டைரக்டர் விக்ரமனை போனில் பிடித்தோம்... "நான் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்ப எல்லாம் அவ்வளவா பார்க்கிறது கிடையாது. சூர்யவம்சம் படத்தை பத்தின மீம்ஸ் ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கிறதா அப்பப்போ என் பையன் சொல்வான். மீம்ஸ், கிண்டல் அதைப் பத்தியெல்லாம் நான் வருத்தப்படுறது இல்லை. இத்தனை வருசம் கழிச்சும் நினைவில் வச்சு பேசிக்கிட்டிருக்கிற எல்லோருக்கும் நன்றி." "நேத்து கூட 'சூர்யவம்சம்' படத்தை கே-டி.வி-யில போட்டாங்க. சன் நெட்வொர்க்-ல இதுவரைக்கும் அதிகமா டெலிகாஸ்ட் பண்ணின படம் சூர்யவம்சம் தான். ஒரு மாசத்துக்கு ஒரு தடவையாவது சன் டி.வி-லயோ கே டி.வி-லயோ போட்ருவாங்க. ஒவ்வொரு முறை டெலிகாஸ்ட் ஆகும்போதும், குறைஞ்சபட்சம் நாலு பேராவது எங்கே இருந்தாவது போன் பண்ணி, 'இந்தப் படத்தை நான் 100 தடவை பாத்திருப்பேன்.. இன்னிக்கும் பார்க்கிறேன்.. சூப்பரா இருக்கு'னு சொல்வாங்க." ஸ்ட்ரைக் தொடர்பா தயாரிப்பாளர்கள் என்ன முடிவெடுக்கிறாங்களோ அதுக்கு நாங்க கட்டுப்படுவோம். மூணு நாளைக்கு முன்னாடி இயக்குநர்கள் சங்க கூட்டத்துல, இப்போதைக்கு படம் பண்ணிக்கிட்டு இருக்கிற எல்லா டைரக்டர்ஸும் வந்திருந்தாங்க. எல்லோருமே தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தர்றதாதான் சொன்னாங்க. சீக்கிரம் முடிஞ்சிடும் பார்க்கலாம்.

'Suryavamsam' memes template is now trending on social media. In this situation, Director Vikraman talks about this memes. Exclusive interview is here.

Category

People

Recommended