• 7 years ago
குரங்கணி காட்டு தீ ஏற்பட்டதற்கான காரணம் அதன் பின்னணி குறித்து விசாரணை நடத்த பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. குரங்கணி வனப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு 36 பேர் வரை சென்றனர். அவர்களுள் 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு காட்டுத் தீ மளமளவென பற்றி எரிந்தது. அப்போது மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த விபத்தில் திரும்பும் திசையெல்லாம் தீ பற்றி எரிந்ததால் தப்ப வழியின்றி 9 பேர் உடல் கருகினர்.


Atulya Misra appointed as investigating officer for Kurangani forest

Category

🗞
News

Recommended