கடைசியா தமிழகத்துக்கே வந்து சேர்ந்த ஸ்ரீதேவி..

  • 6 years ago
துபாயில் கடந்த சனிக்கிழமை இரவு மறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய பேச்சு தற்போது தான் சற்று ஓய்ந்துள்ளது.
ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் பிப்ரவரி 28-ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தொடங்கி அன்று மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கரைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகை ஶ்ரீதேவி இறப்பில் மர்மம் இருப்பதாக பலரும் சந்தேகம் தெரிவித்துவந்த நிலையில் அவரின் உடல் மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தியா கொண்டுவரப்பட்டு பிப்ரவரி 28-ம் தேதி தகனம் செய்யப்பட்டது.
உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி எதிர்பாரதவிதமாக உயிரிழந்தார். பிப்ரவரி 28 அன்று இந்தியா வந்த ஸ்ரீதேவியின் உடல் மும்பை அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ், செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டது. ஏராளமான ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் திரண்டு ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் பிற்பகல் 2 மணியளவில் தொடங்கி அன்று மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கரைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது அந்த அஸ்தி ராமேஸ்வரத்தில் இன்று கரைக்கப்படவுள்ளது. அதற்காக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அஸ்தியை எடுத்துக்கொண்டு தமிழகம் வந்துள்ளார்.
போனி கபூர் மற்றும் அவரது குடும்பத்தினர் மும்பையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து பின்னர் ராமேஸ்வரம் சென்று அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஸ்ரீதேவியின் அஸ்தியை கரைக்க உள்ளனர்.


Actress Sridevi burned ash to dissolved in rameshwaram sea. Boney kapoor came to tamilnadu for dissolve ash.

Category

🗞
News

Recommended