ரஜினிக்கு நண்பன் விஷாலுக்கு எதிரியான தியேட்டர் சங்க நிர்வாகிகள்- வீடியோ

  • 6 years ago
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் டிஜிட்டல் நிறுவனங்களை கட்டண குறைப்பு செய்யுமாறு வலியுறுத்தி மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்வதை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கடந்த ஒரு வார காலமாக தமிழக திரையரங்குகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால்கடந்த ஒரு வார காலத்தில் திரையரங்கு களுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வியாபார வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இம்முடிவுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்ற நிலைப்பாட்டை கடைப்பிடித்து வந்தது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம். சென்னையில் பொதுசெயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம் தலைமையில் சங்கத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் சுப்பிரமணி, ராஜமன்னார், வேலூர் சீனு, தென்காசி பிரதாப் ராஜா மற்றும் 150க்கும் மேற்பட்ட தியேட்டர் அதிபர்கள் கலந்து கொண்டனர். சென்னை நகரில் இருந்து யாரும் இக்கூடட்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வார காலம்வேலை நிறுத்தம் பேச்சுவார்த்தை என இழுத்து கொண்டு போய் விட்டால் விஷால் விரும்பினால் கூட இரும்பு திரை ரிலீஸ் செய்ய முடியாது. ஏப்ரல் மாதம் காலா மக்கள் கவனத்திற்கு வரும் போது இரும்புத்திரை எப்போது என்று தீர்மானிக்க முடியாது. எனவே 3 மாதம் தள்ளி போக வேண்டி வரும். இதன் மூலம் தொழில் ரீதியாக, பொருளாதார முடக்கத்திற்கு விஷால் ஆளாக வேண்டி இருக்கும். எங்கள் நோக்கம் இரும்பு திரையை முடக்கி நேரடியாக காலாவுக்கு கால்கோள் விழா நடத்தி கல்லா கட்டுவதே," என்கின்றனர் தியேட்டர் சங்க நிர்வாகிகள்.


Theater owners in Tamil Nadu have decided to shunt down theaters from March 16 and open again on April 27th strightly to the release of Kaala.