ஆர்யா நிகழ்ச்சியைக் கலாய்த்த சதீஷ்!

  • 6 years ago
தமிழ் சினிமா உலகில் இந்தக் கேள்வி மட்டும் பல வருடங்களாகக் கேட்கப்பட்டு வருகிறது. நடிகர் ஆர்யாவுக்கு எப்போது திருமணம் எனும் கேள்விதான் அது. இப்போது, தொடங்கப்பட்டிருக்கும் கலர்ஸ் டி.வி-யில் ஆர்யா திருமணம் செய்துகொள்ளப் பெண் தேடும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அவரை அவரது நண்பரும் காமெடி நடிகருமான சதீஷ் ட்விட்டரில் கலாய்த்து பதிவிட்டுள்ளார். ஆர்யாவும் பதிலுக்கு சதீஷை வாரி இருக்கிறார். கலர்ஸ் டி.வி-யில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்துகிறார் ஆர்யா. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்யவுள்ளார். அதற்காக ஆர்யா தற்போது நிகழ்ச்சியின் மூலம் பெண் தேடி வருகிறார். அதில், "ஆர்யா டார்லிங் சும்மாவே இததான் செஞ்சிட்டு இருந்தீங்க. இப்போ இந்த வேலைக்கு காசு வேற தராங்க" என கிண்டலாக கூறியுள்ளார் சதீஷ். இந்த ட்வீட்டை ரசிகர்கள் அதிகமாக ரீ-ட்வீட் செய்தனர்.

Arya is conducting a show on 'Enga veettu maapillai' in Colors TV. Many women have been participating in this event. Recently comedy actor Sathish has tweeted about Arya's program.

Category

🗞
News

Recommended