கிசுகிசு - Gossip time!

  • 6 years ago
கைவசமுள்ள ஒரு படமும் முடிந்து அடுத்த மாதம் திரைக்கு வரப்போகிறது. அதனால் அடுத்த படத்திற்கான வேலையைத் தொடங்கிவிட்டார். அதற்கான நடிகர்களை தேடிக்கொண்டிருக்கிறார். 'உடனே புது முகங்களுக்கு வாய்ப்பு உண்டா பாஸ்?' கேட்டுவிட்டார்கள். இது வேற லெவல்! சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் அனுபவம் வாய்ந்த நடிகர்ளுக்கு போன் போட்டு, "எங்களது அடுத்த படத்தில் உங்களை நடிக்க வைக்காலாம்னு இருக்கோம். சார் ஒரு ஒர்க் ஷாப் நடத்துவார். அதில் நீங்கள் எப்படி நடிக்கிறீங்கன்னு பார்த்துட்டு அதுக்கப்பறந்தான்... நீங்க ஓக்கேவா இல்லையான்னு முடிவு சொல்லுவோம். எப்பவ வர்றீங்க?!" என்று எதிர் தரப்பில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக்கூட கேட்காமல் அழைப்பு விடுகிறாராம் அவரது அசோசியேட் டைரக்டர்! மூக்கு பொடப்பா இருந்தால், இப்படியெல்லாமா யோசிக்கத் தோணும்!?


That music director turned hero is now calling senior actors for his work shop

Recommended