சுராங்கனி மனோகர் காலமானார்!

  • 6 years ago
சிலோன் மனோகர் என அழைக்கப்பட்ட பிரபல நடிகரும், பாடகருமான ஏ.இ.மனோகரன் சென்னையில் நேற்று காலமானார். இவர் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்தவர். பாப் இசைச் சக்கரவர்த்தி எனப் பாராட்டுப் பெற்றவர். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பல ரசிகர்கள் உள்ளனர். 1970-களில் இளையராஜா இசையில் வெளிவந்த 'அவர் எனக்கே சொந்தம்' என்ற படத்தில், இலங்கையில் மிகவும் பிரபலமான பாடல் ஒன்று பயன்படுத்தப்பட்டது. "சுராங்கனி" என்ற அந்தப் பாடலை இயற்றிப் பாடியவர் சிலோன் மனோகர். இவர் பாடிய "சுராங்கனி சுராங்கனி.. சுராங்கனிடா மாலுகெனாவா.." என்ற பைலா பாடல் இலங்கை, இந்திய ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. சென்னையில் வசித்து வந்த சிலோன் மனோகர் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்றிரவு காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Famous Actor and singer Ceylon Manohar Surangani manohar died at Chennai yesterday. He has acted in many films and serials, including 'Jay jay' and 'Manidharil iththanai nirangalaa'.

Recommended