பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் காலமானார்! | Versatile Actor Irrfan Khan passes away#RIPIrfan
  • 3 years ago
ஒரு நடிகனின் வேலை இன்னொருவனாக மாறுவது அல்ல. அந்த கதாப்பாத்திரத்தில் மறைந்துள்ள நிஜத்தை வெளிகொண்டுவருவதுதான். அப்படி தான் நடிக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திலும் அதன் நிஜத்தை நமக்கு உணர்த்தியவர், நடிகர் இர்ஃபான் கான். பாலிவுட்டில் கடந்த இருபது ஆண்டுகளில் இர்ஃபான் நிகழ்த்தியவை யாரும் நினைத்துப் பார்க்க முடியாதவை. ஆனால் அந்த இடத்தை அடைந்து, அதை செய்து முடிக்க அவர் செய்த நீண்ட காத்திருப்பும், கடின உழைப்பும் ஏராளம்.

1967 ஆம் ஆண்டு, ஜனவரி 7 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜா வீட்டு கண்ணுகுட்டியாக பிறந்தார் இர்ஃபான் கான். அவருடைய முழுப்பெயர் சஹாப்சாதே இர்ஃபான் அலி கான். இர்ஃபானுக்கு முதல் காதல், கிரிக்கெட் மீதுதான். கிரிக்கெட்டர் ஆகும் கணவோடு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி, ரன்களை விரட்டிக்கொண்டிருந்த இர்ஃபானுக்கு, ஒரு டோர்னமென்ட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவருடைய பெற்றோர் அவரை விளையாட அனுமதிக்கவில்லை. அதனால், கிரிக்கெட் மீதான காதலை புதைத்துவிட்டு, படிப்பிலேயே கவனம் செலுத்த துவங்கினார் இர்ஃபான்.

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India #RIPIrfan
Recommended