செரிமானத்திற்கு விட்டமின்ஸ் சத்து மிகவும் அவசியமாகும்...வீடியோ

  • 6 years ago
செரிமானக்கோளாறுகள் தான் பல்வற்றின் ஆரம்ப புள்ளியாக இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாததால் தான் வயிற்றுவலியில் துவங்கி, நம் உடலுக்கு போதுமான நியூட்ரிசியன்கள் கிடைக்காமல் அல்லல்பட வேண்டிய நிலமை ஏற்படுகிறது. இதனால் உடல் எடை கூடுவது, சோர்வாக இருப்பது என நாம் பெரிதும் கண்டு கொள்ளாத பல்வேறு உபாதைகள் ஆரம்பித்திடும். இதனை நாம் கண்டு கொள்ளாத விட்டால் இதுவே பெரிய பிரச்சனையாக முடிந்திடும். பொதுவாக செரிமானத்திற்கு விட்டமின்ஸ் சத்து மிகவும் அவசியமாகும். சத்தான ஆகாரங்களை சாப்பிடுவதால் மட்டுமல்ல பேலன்ஸுடு டயட் எடுத்துக் கொள்பவர்கள் கூட சாப்பிட்ட உணவு சரியாக செரிமானம் நடப்பதற்கு விட்டமின்ஸ் எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியமாகிறது. விட்டமின் பி1 அல்லது தையமின் தான் நம்முடைய எனர்ஜிக்கு அடிப்படையாக விளங்குகிறது. இந்த விட்டமின் நம் உடலில் சேர்ந்து செரிமானத்திற்கு தேவையான திசுக்களை உறுதிப்படுத்துகிறது. இதனால் செரிமானம் துரிதமாக நடைபெறுவதோடு நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். விட்டமின் பி1 தொடர்ந்து எடுத்து வருவதால் பசியின்மை பிரச்சனை இருக்காது. அதே நேரத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அரிசி,தானியங்களில் இவ்வகை விட்டமின்ஸ் நிறைய இருக்கிறது. விட்டமின் பி2 நகம் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. சருமத்தின் வளர்ச்சிக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருந்திடும். இது கார்போஹைட்ரேட்டை உடைக்க பயன்படுவதால் கார்போஹைட்ரேட் உணவுகள் விரைவில் செரிமானம் ஆக உதவிடும். பச்சைக் காய்கறிகள்,சோயா போன்ஸ்,காளான்,பாதாம்,முட்டை மற்றும் நட்ஸ் ஆகியவற்றைல் விட்டமின் பி2 அதிகமாக இருக்கிறது. பார்வைத்திறனுக்கு, எலும்பு வளர்ச்சிக்கு உதவிடும் இதே விட்டமின் ஏ தான் செரிமானத்திற்கு உதவுவிடுகிறது. வயிற்றில் இருக்கிற முகோசல் திசுக்கள் மூலமாகத்தான் செரிமானம் நடைபெறுகிறது. விட்டமின் ஏ இந்த திசுக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாய் இருக்கிறது. கேரட்,சுவரொட்டி,பால், ஸ்வீட் பொட்டேட்டோ,ஆகியவற்றில் விட்டமின் ஏ அதிகம்.

List Of Vitamins Which Helps To Digestion.

Recommended