• 8 years ago
பாகுபலி-2 படத்திற்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள படம் 'பாக்மதி'. இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கு பிறகு அனுஷ்கா எந்த படத்திலும் நடிக்க கமிட்டாகவில்லை.'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக உடல் எடையை அதிகமாக்கிய அனுஷ்காவால் எளிதாக உடல் எடையைக் குறைக்க முடியவில்லை. யோகா, உடற்பயிற்சி என முயற்சித்துப் பார்த்தும் 'பாகுபலி 2' படத்தில் நடிக்கும்போதும் குண்டாகவே இருந்தார்.உடல் எடையை குறைக்க முழுமூச்சில் உடற்பயிற்சியில் இறங்கி ஜிம்மே கதியாகக் கிடந்தார். அதன் பலனாக தற்போது ஸ்லிம்மாகி உள்ளார். அனுஷ்கா ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் ஒன்றை அவரே சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இதனிடையே அனுஷ்கா, நீண்டகாலமாக முதுகு வலியினால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆயுர்வேத சிகிச்சை எடுப்பதே சிறந்த வழி என்று பலர் சொன்ன அட்வைஸை ஏற்று, இப்போது கேரளாவில் முகாமிட்டு முதுகுவலிக்கு சிகிச்சை எடுத்து வருகிறார்.
பாகுபலி-2 படத்திற்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள படம் 'பாக்மதி'. இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கு பிறகு அனுஷ்கா எந்த படத்திலும் நடிக்க கமிட்டாகவில்லை.



Anushka, who gained body weight for 'Inji Iduppazhagi', did not easily reduce body weight. She was worked out in the gym to reduce the weight of the body. Now, she is looking slim. Meanwhile, Anushka has been reported to be suffering from back pain. Ayurvedic treatment is being done for the back pain in Kerala now.

Recommended