அட்டம சனி, அர்த்தாஷ்டம சனியா?...கலங்க வேண்டாம்- வீடியோ

  • 7 years ago
சனி பெயர்ச்சி சிலருக்கு நன்மையும், சிலருக்கும் சோதனையாகவும், சில ராசிக்காரர்களுக்கு வேதனையாகவும் இருக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு அட்டம சனியாக அமர்கிறார் சனி பகவான் ஜன்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது அட்டம சனி என்று அழைக்கப்படுகிறது. அகப்பட்டவனுக்கு அட்டமத்து சனி என்ற பழமொழியே இருக்கிறது. ஜன்ம ராசிக்கு நான்காவது ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது அர்த்தாஷ்டம சனி என்று அழைக்கப்படுகிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாக அமர்கிறார். சனியை கண்டு அச்சம் வேண்டாம் அதற்கேற்ப பரிகாரங்கள் இருக்கின்றன.

சனிபகவான் 7வது இடத்தில் இருந்து ராசிக்கு 8வது இடத்திற்கு இடம் பெயர்கிறார். இதுநாள்வரை கண்டக சனியாக இருந்தவர் அஷ்டமத்து சனியாக மாறுகிறார். அகப்பட்டவனுக்கு அட்டமத்து சனி என்று கவலைப்பட வேண்டாம். ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் யோகாதிபதி எனவே கவலைப்படாமல் வெற்றி நடை போடுங்கள். சனிபகவான் சோதனை தருவார் வேதனை தரமாட்டார்.

தீமை நடப்பது போல தெரிந்தாலும் அது நன்மையாகவே இருக்கும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது எச்சரிக்கை தேவை. நீர் நிலைகளில் பயணிக்கும் போது கவனம் தேவை. தனுசில் அமர்ந்து சனி பகவான் 3வது பார்வையாக 10வது இடத்தை பார்க்கிறார். தொழில் ஸ்தானத்தின் மீது விழுவதால் தொழில் மாற்றம் ஏற்படும். வேலை மாற்றம் ஏற்படும்.

The Saturn transits from Viruchigam rasi to Dhansu rasi.Here is the remidies for Arthastama sani and Attama Sani. Lord Shani seeks help from Lord Hanuman, who in turn asks Lord Shani to forgive the grieving person

Recommended