• 7 years ago
அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் மாவட்ட ஆட்சியர் ஹரிகரனுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் காவல் ஆணையர் அமல் ராஜ், வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆளுநரின் இந்த ஆலோசனைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து. ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து போராட்டமும் நடைபெற்றது.இந்நிலையில் கோவையில் 2-வது நாளாக இன்றும் ஆய்வு மேற்கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துடைப்பம் மூலம் குப்பைகளை அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டார். தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றையும் ஆய்வு செய்தார்.
கோவையில் நடைபெறும் தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சியில், தமிழில் வணக்கம் கூறி, தனது உரையை தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Governor Banwarilal prohit explained why he examined with officials. He said if we examined only we can appreciate the govt. Governor Banwarilal prohit participated in clean india function at Coimbatore.

Category

🗞
News

Recommended