மனோபாலாவுக்கு தஞ்சை திருவையாறுதான் பூர்விகம். சினிமா மீதான மோகத்தில் இருந்த இவர், உதவி இயக்குநராக வேண்டும் என்ற இலக்குடன் இருந்து வந்தார். இதனிடையே, கமல்ஹாசனின் நட்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் உதவி இயக்குநரானார் மனோபாலா. உதவி இயக்குநராக இருக்கும் போதே மனோபாலாவின் சாமர்த்தியம், அதிரடியாக எடுக்கிற முடிவு எல்லாமே அவருக்கு பின்னாளில் ரொம்பவே பயன்பட்டது. தொடர்ந்து, ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’ என வரிசையாகப் படங்களில் பணியாற்றினார். ஒருகட்டத்தில் பாக்யராஜ் இயக்குநரானது போல, அடுத்த சிஷ்யரான மணிவண்ணனும் இயக்குநரானார். மனோபாலாவும் வெளியே வந்தார். கார்த்திக்கையும் சுஹாசினியையும் வைத்து ‘ஆகாயகங்கை’ படத்தை முதன் முதலாக இயக்கினார். இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாமே அருமையாக அமைந்தன.
இதன் பின்னர் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவான ‘நட்புக்காக’ படத்தில் மனோபாலாவை நடிக்கவைத்தார். அதன்பின்னர் படத்தில் நடிக்க வாய்ப்பு குவிந்தது. 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கிய மனோபாலா இன்று நம்மிடத்தில் இல்லை.
Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/

Category
🗞
News