வாட்ச் பில் எங்கே தம்பி..? அண்ணாமலையை ஒரண்டை இழுக்கும் காயத்ரி ரகுராம்

  • last year
‘வாட்ச் பில் எங்க தம்பி?’ என்றுதான் காயத்ரி ரகுராம் ஆரம்பித்து வைத்தார்; ரஃபேல் பில்லை முன்வைத்து அண்ணாமலைக்கு ஆதரவு மற்றும் எதிராக சமூக ஊடகம் ரெண்டுபட்டிருக்கிறது.

பாஜகவிலிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி ரகுராம் தீவிரமாக களமாடி வருகிறார். தினத்துக்கு அவர் பதிவிடும் ட்விட்டர் பதிவுகளில் பெரும்பாலானவை அண்ணாமலையை குறிவைத்தே இருக்கும். இதற்காக அண்ணாமலை ஆதரவாளர்களின் ஏச்சுப் பேச்சுக்களால் தாக்குண்டபோதும், காயத்ரி ரகுராம் பின்வாங்குவதாக இல்லை. இந்த வரிசையில் இன்றைய தினம் ‘வாட்ச் பில் எங்க தம்பி?’ என்ற ஒற்றை பதிவில் அண்ணாமலைக்கு எதிரான களேபரத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.

சர்ச்சையின் தொடக்கமாக ’அண்ணாமலை மணிக்கட்டை அலங்கரித்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான வாட்சுக்கு பில் கோரி’ அமைச்சர் செந்தில் பாலாஜி எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலையும் துரிதமாக பதில் அளித்திருந்தார். ’ரஃபேல் விமான நிறுவனத்தின் வாட்ச், தேசபக்தி’ என்றெல்லாம் விவரித்தவர், ’வாட்ச் பில் மட்டுமல்ல, முதல்வர் குடும்பத்தினர் மற்றும் தமிழகத்தின் 13 அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை ஏப்ரலில் வெளியிடுகிறேன்’ என்றார் அண்ணாமலை.

அதனை நினைவூட்டும் விதமாக, ஏப்ரல் பிறந்ததுமே ‘வாட்ச் பில் எங்க தம்பி?’ என்று அண்ணாமலையை பகடியாக கேட்டிருக்கிறார் காயத்ரி ரகுராம். இந்த பதிவுக்கான பதில்களாக, ‘அண்ணாமலை ஏப்ரல் ஃபூல் செய்திட்டார்; இருந்தா கொடுக்க மாட்டாரா?; ஏப்.14க்கு எப்படியும் தந்திடுவார்’ என்றெல்லாம் பலரும் பதில் பதிவிட்டு வருகின்றனர். வம்படியான சிலர் பொதுவெளியில் இயங்கும் பெண்களை தரக்குறைவாக தாக்கும் வழக்கத்திலும் இறங்கியுள்ளனர்.

#காமதேனு #Kamadenu #KamadenuTamil #காமதேனுதமிழ்
#annamalai

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/