கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுதல் குறித்து,தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் இ.ஆ.ப. அவர்கள், இன்று (17.08.2021) தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையம்,காமராஜர் பேருந்து நிலையம், கோட்டூர், சின்னமனூர், உத்தமபாளையம் பேருந்து நிறுத்தம், ஆட்டோ நிறுத்தம் ஆகியவைகளில் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, முகக் கவசங்கள் வழங்கி, அப்பகுதியில் உள்ள கடைகள், சாலையோர கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, முககவசம் அணியாமல் இருந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தினார்.
மேலும் நிகழ்வின் போது, கோட்டூர் பகுதியில் முக கவசம் அணியாமல் இருந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு முகக் கவசத்தினை வழங்கி, அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் நிகழ்வின் போது, கோட்டூர் பகுதியில் முக கவசம் அணியாமல் இருந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு முகக் கவசத்தினை வழங்கி, அறிவுரைகள் வழங்கினார்.
Category
🗞
News