ஒரேநாளில் ஒன்பது வகையான நிகழ்வுகளை நடத்தி அசத்திய லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி!
பன்னாட்டு அரிமா சங்கங்கள் மாவட்டம் 324 டி கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி சார்பில் உக்கடம் பேருந்து நிலையத்தில் ஒன்பது வகையான நிகழ்வுகளை ஒரேநாளில் நடத்தியது. இதில் 6:30 மணி அளவில் பொது மக்கள் சுமார் 400 பேருக்கு கபசுர குடிநீர் வழங்குதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, மரக்கன்றுகள் நடுதல், தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு, கண், நீரிழிவு நோய், குழந்தைகளுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம் வழங்குதல், சக்கரை நோய் விழிப்புணர்வு, பசிப்பிணி போக்கும் உணவு வழங்கும் நிகழ்வு, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு பேரணி, பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் கோவை அரிமா மாவட்ட ஆளுநர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் என ஒன்பது வகையான நிகழ்வுகளை ஸ்மார்ட் சிட்டி கிளப் சார்பில் உக்கடம் பேருந்து நிலையத்தில் இன்று காலை நடத்தியது. இந்நிகழ்வுகள் பன்னாட்டு அரிமா சங்கங்கள் 324 டி கோவை மாவட்ட ஆளுநர் கே குப்புசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தொடக்க நிகழ்வாக கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி, ரேஸ்கோர்ஸ் மற்றும் நைட்டிங்கேல் கிளப் சார்பாக 13 வது நாளாக பொதுமக்களுக்கு 15 வகை மூலிகை பொருட்களுடன் கூடிய கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி காலை 6:30 மணி அளவில் உக்கடம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. தொடர்ந்து கண், நீரிழிவு நோய், குழந்தைகளுக்கான புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் வழங்குதல், உணவுகள் வழங்குதல் மற்றும் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆளுநர் கே.குப்புசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி உக்கடம் காவல் நிலையம் வரை நடைபெற்றது. மேலும் உக்கடம் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்வுகள் காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் அரிமா ராஜேஷ் மற்றும் வட்டார தலைவர் அரிமா மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஸ்மார்ட் சிட்டி கிளப் தலைவர் அரிமா சுபாஷினி அருண், செயலாளர் அரிமா சுசீலா பால்ராஜ், பொருளாளர் அரிமா முத்துசாமி, ரேஸ்கோர்ஸ் கிளப் தலைவர் அரிமா வசந்தாமணி, செயலாளர் அரிமா நிர்மலா நந்தகுமார், பொருளாளர் அரிமா இந்திரா அங்கப்பன், நைட்டிங்கேல் கிளப் தலைவர் அரிமா ஜானகி, செயலாளர் அரிமா சந்திரபிரபா, பொருளாளர் அரிமா கண்ணம்மாள், ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஜிஎம்டி ஒருங்கிணைப்பாளர் அரிமா ராதிகா மது, அரிமா பொன்னம்பலம் ஆகியோர் செய்து இருந்தனர்.

Category
🗞
News