Click & Cook | paneer paratha with paneer cutlet | Vikatan Samayal

  • 4 years ago
Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU
-~-~~-~~~-~~-~-

Click & Cook | paneer paratha with paneer cutlet | Vikatan Samayal

பன்னீர் ஸ்டெப்ட் பரத்தா
தேவையானவை:
சப்பாத்திக்கு பிசைந்த மாவு - தேவைக்கு,
பன்னீர் (துருவியது)- ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது),
தக்காளி - ஒன்று,
மிளகாய்தூள், கொத்தமல்லி தூள், ஜீரா தூள் - தலா அரை டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - அரை டீ ஸ்பூன்,
முட்டை - ஒன்று,
மைதா,
எண்ணெய்,
உப்பு, ப்ரெட் தூள் - தேவையான அளவு .

செய்முறை: கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு வதக்க வேண்டும். அதனுடன் அரை டீஸ்பூன் உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.அரை டீஸ்பூன் மிளகாய்தூள், கொத்தமல்லிதூள், ஜீராதூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் துருவிய பன்னீரை சேர்க்க வேண்டும். கொத்தமல்லி தழைகளை போட்டு வதக்க வேண்டும்.
செய்து வைத்த பன்னீர் கலவையை சப்பாத்திக்கு பிசைந்து வைத்த மாவில் வைத்து மூடி மீண்டும் சப்பாத்தி பதத்திற்கு மசாலா வெளியே வரதா மாதிரி சப்பாத்தி கல்லில் வைத்து சப்பாத்தியாக மெல்லியதாக உருட்டி கொள்ளவும். உருட்டி வைத்த சப்பாத்திகளை நான்ஸ்டிக் கல்லில் வைத்து சுட்டு எடுக்கவும்.

பன்னீர் கட்லெட்:
பன்னீர் கலவையில் ப்ரெட் தூள், மைதா தூள் போட்டு நன்றாக பிசைந்து அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். உருண்டைகளை முட்டையில் நனைத்து பின்னர் ப்ரெட் தூளில் பிரட்டி கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் கட்லெட் உருண்டைகளை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். .


Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV

Recommended