Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/28/2018
திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் பயங்கர வெடிசப்தத்துடன் இன்று காலை மிக லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று காலை 8.10 மணியளவில் திடீரென பயங்கர வெடிசப்தத்துடன் கூடிய அதிர்வுகள் உணரப்பட்டன. சில வினாடிகள் மட்டுமே இந்த அதிர்வு உணரப்பட்டது.

இதனால் திண்டுக்கல் மாவட்ட மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இது தொடர்பாக கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி செல்வேந்திரன் கூறுகையில், பூமியின் கீழ் பகுதியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டரில் 3 ஆக பதிவாகி இருந்தது என்றார்.

A low intensity tremor measuring 3 on the Richter scale occurred in Dindigul District.

Category

🎵
Music

Recommended