• 7 years ago
தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. Loading ad தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் ஆங்காங்கே அவ்வப்போது ஜில்லென மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Heavy rain will be there in south tamilnadu. Chennai will be cloudy.

Category

🗞
News

Recommended