Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/4/2018
மனிதர்களால் உருவாக்கப்பட்டு வரும் பேர்ல் கத்தாரின் வரைபடத்தை சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடம் வெளியிட்டுள்ளது. விண்வெளி பார்வையில் இந்த புகைப்படம் பார்ப்பதற்கு அப்படியே பைனாகுலர் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்தின் விண்வெளியாளர் ஒருவர் கத்தார் தலைநகர் தோஹாவின் வரைபடத்தை படம் பிடித்துள்ளார். அரேபியன் பெனின்சுலாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பேர்ல் கத்தாரின் வரைபடமானது வியக்க வைப்பதாக இருக்கிறது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேர்ல் கத்தார் தனித்தீவு 1.5 சதுர கிலோமீட்டர்(0.6 சதுர மைல்கள்) கொண்டது. கத்தார் குடிமகன்கள் அல்லாத வெளிநாட்டவர் இந்தத் தீவின் உரிமையாளர்களாக இருக்கின்றனர்.


An astronaut flying aboard the International Space Station took this long lens photograph of a man made island Pearl-Qatar, which looks awesome look of binocular.

Category

🗞
News

Recommended