மருத்துவமனையில் மாதவன்- வீடியோ

  • 6 years ago
நடிகர் மாதவன் 'இறுதிச்சுற்று' படத்திற்கு பிறகு தனக்கு ஏற்ற கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து மிகவும் சுறுசுறுப்பாக நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். அவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த 'விக்ரம் வேதா' படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். அடுத்து 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படத்தில் நடிக்கவிருக்கிறார் மாதவன். இந்நிலையில், திடீரென மாதவனுக்கு தோள்பட்டையில் ஆபரேஷன் நடைபெற்றுள்ளது. இந்த தகவலை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார் மாதவன். மாதவனின் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாதவனுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ஆபரேஷனுக்கு பிறகு வலது கை இருப்பதையே உணர முடியவில்லை எனக் கூறியிருக்கிறார் மாதவன்.

Madhavan will be doing the role of karthik in 'Vinnaithaandi varuvaaya 2'. In this case, suddenly Madhavan undergoes surgery on his right shoulder.