ஆறுமுகசாமி கமிஷன் முன்பு ஆஜரான சசிகலா வழக்கறிஞர்- வீடியோ

  • 6 years ago
சசிகலா மீது புகார் கொடுத்தவர்களின் விவரங்களை கேட்டு பெற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு ஆஜராகியுள்ளார். அந்த விவரங்களை கொடுத்தால் மட்டுமே தன்னிடம் உள்ள ஆவணங்களை கொடுக்க முடியும் என்று சசிகலா தெரிவித்துவிட்டார்.

ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நல பாதிப்புகளால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்கு பிறகு, டிசம்பர் 5-ஆம் தேதி இறந்துவிட்டார்.அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அவர் தனது விசாரணையை கடந்த நவம்பர் மாதம் தொடங்கினார். இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர்கள், அரசின் முன்னாள் இன்னாள் அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளார். இது வரை 20 பேரிடம் விசாரணை நடத்திவிட்டார்.

இதைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை நடத்த டிசம்பர் 21-ஆம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு இமெயில் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் உள்ள ஆவணங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். ஆனால் தனக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே உள்ள நட்பை கொச்சைப்படுத்தும் விதமாக தன் மீது புகார் கொடுத்தவர்கள் யார் என்ற விவரங்களை கூறினால் மட்டுமே தன்னால் ஆவணங்களை ஒப்படைக்க முடியும் என்றும் கமிஷன் முன்பு ஆஜராக முடியும் என்றும் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மூலம் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி மனுவில் தெரிவித்திருந்தார்.




Sasikala's advocate Raja Senthur Pandiyan appears before arumugasamy commission regarding to get the details of who complaints against Sasikala.