சசிகலாவின் கோரிக்கையை ஏற்றது விசாரணை கமிஷன்- வீடியோ

  • 6 years ago
சசிகலா கோரியபடி அவருக்கு எதிராக புகார் கொடுத்தவர்களின் விவரங்களை அளிக்கவும், சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யவும் ஆறுமுகசாமி கமிஷன் ஏற்றுக் கொண்டது. ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் 20-க்கும் மேற்பட்டவர்களை ஆறுமுகசாமி விசாரணை நடத்தியுள்ளார். இதனிடையே சசிகலாவிடமும் விசாரணை நடத்த பெங்களூர் சிறைத் துறைக்கு சம்மன் அனுப்பியது. கமிஷனின் சம்மனுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றால் தன் மீது புகார் கொடுத்தவர்கள் குறித்த விவரங்களை கொடுக்க வேண்டும் என்று சசிகலா தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மூலம் கோரிக்கை விடுத்தார்.

இந்த விவரங்களை பெற்ற 15 நாட்களுக்குள் தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை சமர்ப்பிப்பதாகவும் கமிஷன் முன்பு ஆஜராவதாகவும் சசிகலா தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து கமிஷன் விசாரிக்கும் நபர்களிடம் தங்கள் தரப்பும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று அவர் கோரினார்.

Arumugasamy Commission accepts Sasikala's demands regarding Jayalalitha's death inquiry. She demands to let her know the details of the persons who gives complaint against her.