சங்கர் கொலை..நிருபர்களிடம் கோபப்பட்ட கவுசல்யா- வீடியோ

  • 7 years ago
காதல் கணவர் சங்கரை இழந்தபோதிலும், தீரத்தோடு போராடி, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த கவுசல்யாவுக்கு எதிராக ஆபாச, அறுவெறுப்பு தாக்குதல்கள் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல்களை வெளியிடுவது ஜாதிய அடிப்படை கட்டுமானத்தில் ஊறிப்போனவர்கள்தான் என்றபோதிலும், விஷத்தை தேனில் கலந்து கொடுப்பதை போல, இதற்கு பாசம், குடும்ப கவுரவரம் என்றெல்லாம் பெயர் சூட்டி நைசாக பிறர் மனதுக்குள் புகட்டுகிறார்கள் என்பதில்தான் ஒளிந்துள்ளது சூத்திரம்.

கணவனை கண்முன்னே பறி கொடுத்தது மட்டுமல்லாது, தானும் கொலைவெறியர்களின் அரிவாளால் வெட்டுபட்டு புழுபோல ரோட்டில் கிடந்து துடித்ததை மனதில் உருவேற்றி வைராக்கியமாக மாற்றி போராடி வருகிறார் கவுசல்யா.சோகம், நெருக்கடி தாங்காமல் ஒருமுறை விஷம் குடித்து தற்கொலை செய்யப்போன அவரை மீட்டு கவுன்சலிங் கொடுத்து அவரை வாழ வழி செய்து வைத்தது காவல்துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள். அதன்பிறகே பெரியாரின் புத்தகங்களை படித்து, அம்பேத்கரை உள்வாங்கி, ஜாதி கட்டமைப்புக்கு எதிராக பறை ஒலி எழுப்ப ஆரம்பித்துள்ளார் கவுசல்யா.

உண்மையில் கவுசல்யாவின் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்க கூடிய வாழ்க்கை பாடம். சட்டப்படி இதுவரை அவர் எந்த தவறும் செய்துவிடவில்லை. தப்பு செய்தவர்கள் எல்லோரும் எதிர்முகாமை சேர்ந்தவர்கள்தான். 18 வயதை தாண்டிய பிறகு மனதுக்கு பிடித்தவரை கரம்பிடித்தார். அதற்காக வெட்டுபட்ட போதிலும், திரும்பி அவர் வாள் எடுக்கவில்லை, சட்டத்தையே கையில் எடுத்தார். இந்திய சட்டம் தன்னை நம்பிய கவுசல்யாவுக்கு நியாயத்தை வழங்கியுள்ளது.

Category

🗞
News

Recommended