பாஜக நிலைமை படு மோசமாத்தான் இருக்கும் போல!- வீடியோ

  • 6 years ago
ஆர்.கே.நகரில் பாஜகவின் நிலை வெளியில் சொல்வதை விட படு மோசமாகத்தான் இருக்கும் போல தெரிகிறது. இதுவரை வந்துள்ள கருத்துக் கணிப்புகள் இதைத்தான் நிரூபிப்பதாக உள்ளது. இதுவரை வந்த கருத்துக் கணிப்புகளைக் கூட புறக்கணித்தாலும் கூட பேராசிரியர் ராஜநாயகத்தின் கருத்துக் கணிப்பை புறம் தள்ளி விட முடியாது. காரணம், இவரது குழுவினர் பெரும்பாலும் சரியான கணிப்புகளையே வெளியிடுவது வழக்கம். இப்போது வந்துள்ள ஆர்.கே.நகர் குறித்த கருத்துக் கணிப்பும் கூட அட இவ்வளவுதானா உங்க லட்சணம் என்று பாஜகவைப் பார்த்து கேட்க வைப்பதாக உள்ளது.

வெளியிலும், டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் இன்ன பிற தளங்களிலும் பாஜகவினரும், அவர்களது ஆதரவாளர்களும் போட்டு வரும் கோஷத்துக்கும் உள்ளே உள்ள கள நிலவரத்துக்கும் சற்றும் சம்பந்தமே இல்லை.

உண்மையில் ஆர்.கே.நகரில் பாஜகவின் நிலைமை படு கேவலமாகத்தான் உள்ளது. 3வது இடம் இல்லை, 4வது இடமும் இல்லை, 5வது இடம் என்ற நிலையில் பாஜக உள்ளது அதிர வைப்பதாக உள்ளது - நம்மை அல்ல பாஜகவினரை.


According to the survey results of the Team Rajanayagam, the BJP is in big problem in RK Nagar it seems.

Recommended