ஜி.எஸ்.டி வசனத்துக்கு பொங்குனீங்களே... இந்த பாட்டை என்ன பண்ணப் போறீங்க?- வீடியோ

  • 7 years ago
விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் அண்ணாதுரை. ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ராதிகா சரத்குமார், பாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரித்துள்ளனர். டயானா சாம்பிகா, மகிமா, ஜுவல்மேரி என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். தில்ராஜூ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படம் நவம்பர் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு டூயட் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை நடிகராக, இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக இருந்து வந்த விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் எடிட்டராகவும் மாறியிருக்கிறார். இந்தப் படத்தில் அருண்பாரதி என்பவர் பாடல் எழுதியிருக்கிறார்.
அண்ணாதுரையின் பெயரில் இந்த படம் உருவாகியிருப்பதால், இப்படத்திற்கான பாடல்களை அருண்பாரதி, முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை பிறந்த ஊரான காஞ்சிபுரத்திற்கே சென்று எழுதியிருக்கிறார்.

Vijay Antony's 'Annadurai' will feature the song about the GST tax. Would the BJP'ians who puffed up against the dialogues of GST in mersal, was condemn this song?

Recommended