பாடல் வெளியிட்ட பாடகிக்கு 2 ஆண்டுகள் சிறைவாசம்- வீடியோ

  • 7 years ago
எகிப்து நாட்டின் பிரபல பாடகி ஷாய்மா அகமது இசை ஆல்பம் வீடியோ ஒன்றில் அநாகரிமாக வாழைப்பழம் சாப்பிடுவது போல நடித்ததால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல எகிப்து பாடகி ஷாய்மா அகமது சமீபத்தில் 'I have issues' என்ற இசை ஆல்பம் வீடியோ ஒன்றை பாடி வெளியிட்டார். இந்த இசை ஆல்பம் வீடியோவில், ஆபாசமான காட்சிகளும், வரிகளும் இருப்பதாகக் கூறி அவருக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளது எகிப்து நீதிமன்றம்.
ஷாய்மா அகமது வெளியிட்ட 'I have issues' பாடல் வைரலான பிறகு, அது கலாச்சாரத்தை சீரழிப்பதாக கூறி அந்தப் பாடலில் தோன்றிய அவரை 2 வருடங்கள் சிறையில் அடைக்க எகிப்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு இடையே நின்று அவர் வாழைப்பழம் சாப்பிடுவது போலவும், அப்போது இடம்பெறும் பாடல் வரிகள் ஆபாசத்தைத் தூண்டுவது போலவும் இருப்பதாக பலர் குற்றம் சாட்டியதை அடுத்து எகிப்து போலீஸார் தானாக முன்வந்து அவரை கைது செய்தனர்.
சர்ச்சையில் சிக்கிய பிறகு ஷாய்மா, மன்னிப்பு கோரியிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் நீதிமன்றம் இல்லை. அது மட்டுமின்றி ஷாய்மாவின் ஃபேஸ்புக் பக்கமும் நீக்கப்பட்டுவிட்டது. ஷாய்மா கான்செர்ட் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Popular Egypt singer Shaimaa Ahmad recently released a video album titled 'I Have Issues'. Shaaima Ahmed has been sentenced to two years imprisonment for playing with bananas in music video.

Category

🗞
News

Recommended