• 8 years ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொடரில் முத்தழகுவிற்கு பிடித்திருந்த பேயை விரட்டி விட்டார் அம்மன் மீனாட்சி. ஒரு காதல் கதையை பேய் கதையாக்கி இப்போது பேய்க்கு மங்களம் பாடி விட்டார்கள். மீண்டும் பேய் வருமா இல்லையா என்பது இயக்குநர் கையில்தான் உள்ளது. சரவணன் மீனாட்சி மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் இரண்டு சீசன்களை விட மூன்றாவது சீசன் காதல் கதையாக ஆரம்பித்து இந்தி டப்பிங் சீரியல் பாணியில் போய் இப்போது பேய் கதையாக முடிந்திருக்கிறது. பேய் இருந்தால் சாமி வராமலா? சரவணன் மனைவி மீனாட்சிக்கு அம்மன் அருள் பிடிக்கிறது. அப்புறம் என்ன தனது குடும்பத்தினரை பழிவாங்க நினைக்கும் பேயிடம் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற போராடுகிறாள் மீனாட்சி. மீனாட்சியின் தாய்மாமன் சரவணன் குடும்பத்தை கொலை செய்ய திட்டம் போடுகிறார். பேயிடம் இருந்து தப்பியவர்கள் இந்த கொலை முயற்சியில் இருந்து தப்புவார்களா பார்க்கலாம். சரவணன் மீனாட்சி சிந்துபாத் கதையாக நீள்கிறது... சீக்கிரம் முடிங்கப்பா என்று கதறுகின்றனர் நேயர்கள்.

Saravanan meenakshi serial he last so many episodes with the ghost. Meenakshi play amman role. Consumer complaints ghost episode.Saravanan meenakshi not interesed going in serial.

Category

🗞
News

Recommended