என் மனதை கவர்ந்த பாடல் - 004 (உம் பாதம் பணிந்தேன்)

  • 13 years ago
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

1.பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் --- உம்பாதம்

2.நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் --- உம்பாதம்

3.என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் --- உம்பாதம்

Recommended