• 3 years ago
ஆளுநரை அரசியலுக்கு இழுக்க கூடாது - கரூரில் அதிமுக ஓபிஎஸ் அணி செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர் சந்திப்பு.கரூர் மாவட்ட அதிமுக ஓ.பி.எஸ் அணியின் மாவட்ட அலுவலகத்திற்கு அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி வந்திருந்தார். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் மட்டும்தான் வெற்றி பெற்றார். தோல்வியடைந்த ஜெயக்குமார் பேசக்கூடாது என்றும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், பொதுக்குழுவில் வீசிய பாட்டிலில் ஆசிட் அடித்திருந்தால் என்ன ஆவது? அங்கு பாதுகாப்பு இல்லை. கொள்ளை காரனும், கொலை காரனும் கட்சி நடத்துகிறார்கள். எல்லோரும் விரைவில் ஜெயிலுக்கு போக போகிறார்கள். கட்சி காப்பாற்றப்பட வேண்டும். எம்.ஜி.ஆர். மீட்டெடுத்த கட்சி இது. தமிழகத்தில் DVAC சரியாக செயல்படவில்லை என எடப்பாடி சொல்வது சரி. ஏனென்றால், வேலுமணி, கொடநாடு உள்ளிட்ட பல வழக்குகள் அப்படியே உள்ளது. அவர்களை கைது செய்யவில்லை அதனால்தான் விடியா அரசு என்று இந்த அரசை பேசுகிறார்கள்.

Category

🗞
News

Recommended